தர்ஷனுக்கு ஜோடியான சீரியல் நடிகை…
கடந்த வருடம் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் பலரின் அன்பை பெற்றவர் தர்ஷன்.
ஆனால் நடிகை சனம் ஷெட்டியுடனான காதல் விசயத்தில் அவரின் செயல்பாடுகளால் பலருக்கும் அதிருப்தியே. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடாகி பிரிந்தது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமே.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல ஹாசனின் இந்தியன் 2 படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
ஆனால் அதுகுறித்து முறையான அறிவிப்புகள் இதுவரை வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெகு சிலர் மட்டுமே அடுத்தடுத்த படவாய்ப்புகள் கிடைக்கப்பெற்று ஷோபித்து வருகின்றனர். அப்படியாக தர்ஷன் என்ன செய்கிறார் என அப்டேட்ஸ் வருவதில்லை ஏன் என்பது பலரின் கேள்வி.
இந்நிலையில் அவர் மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளாராம். இதில் அவருக்கு ஜோடியாக சத்யா சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளாராம். இந்த அறிவிப்பை தர்ஷணே வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தாய்க்கு பின் தாரம் என்ற தர்ஷணின் லேட்டஸ்ட் ஆல்பம் பலரையும் கவர்ந்துள்ளது.