இரட்டை அர்த்த ட்வீட்..!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ள நிலையில், ஜொமாட்டோ போட்ட ஒரு இரட்டை அர்த்த ட்வீட் கலவையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017’ஆம் ஆண்டு வெளிப்படையாக திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
வரும் 2021’ஆம் ஆண்டு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள், அவரது ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் ஐசிசி உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விராட் கோலி தந்தையாவதற்கும், அனுஷ்கா சர்மா கர்ப்பம் தரித்ததற்கும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. மேலும் அடுத்து தெரிவித்துள்ள ஒரு வாசகம் தாம் தற்போது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
it’s suuch a good news! kuch meetha khana ho to sharma na mat virat your service ❤️
— Zomato (@ZomatoIN) August 27, 2020
அதில், “விராட் அவர்களே, இனிமையான ஒன்றை சாப்பிட நீங்கள் வெட்கப்படக் கூடாது. அது உங்களுடைய சேவையாகும்.” என இரட்டை அர்த்தம் தரும் தொனியில் கருத்து தெரிவித்துள்ளது.
ஜொமாட்டோ போட்ட இந்த டிவீட்டுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
சிலர் இதை ஜொமாட்டோவின் வார்த்தை ஜாலம் எனவும், சிலர் தாய்மையை கேலி செய்து போட்ட பதிவுக்கு சமபந்தப்பட்ட ஊழியர் மீது நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.