அவமானப்பட்ட Sun TV சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா!!

4338

கேப்ரில்லா..

டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சுந்தரி சீரியல் ஹீரோயின் கேப்ரில்லா செல்லஸ் ஆரம்பகால அவமானங்கள் பற்றிய பதிவு தான் இது. தமிழில் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய பிரபலமான சீரியல் சுந்தரி இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

திருச்சியை சேர்ந்த இவர் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறார். அப்பொழுது இவருடைய உறவினர்கள் பலரும் இவரை மோசமாக பேசி இருக்கின்றனர். ஆனால் அவருடைய பெற்றோர் இவருக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர். வாய்ப்பு கேட்டு பல்வேறு இடங்களில் முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. குறிப்பாக இவருடைய நடிப்பு திறமையை காரணம் காட்டி நிராகரிக்காமல் இவருடைய உருவத்தையும் இவர் கருப்பாக இருக்கிறார் என்றும் காரணம் கூறி நிராகரித்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து இணைய பக்கங்களில் பிரபலமாக தொடங்கினார்.

சுந்தரி என்ற சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் பெருவாரியாக ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. கருப்பு நிறத்திற்கு தனி அழகை கொடுத்தவர்.

ஆரம்ப காலத்தில் இவருடைய நிறத்தை காரணம் காட்டி பலரும் இவரை நிராகரித்திருக்கிறார்கள். ஆனால் தற்பொழுது அவருடைய நிறமே அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் பி பிரபல பத்திரிகையான நக்கீரன் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் என்பவருடைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.