ஜான்வி கபூர் அருகே மேல் ஆடை அணியாமல் இருக்கும் பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்!!

1363

ஜான்வி கபூர்..

பிரபல முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமானவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக மாறியுள்ளார்.

பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகை ஜான்வி கபூர் தற்போது தென்னிந்திய சினிமா பக்கமும் வந்துள்ளார். ஜூனியர் என் டி ஆர் உடன் இணைந்து தேவரா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆர்.சி. 15 படத்திலும் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் பிரபல நடிகர் வருண் தவான் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் அருகே அமர்ந்து இருக்கும் நடிகர் வருண் தவான் மேல் ஆடை அணியாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்டது என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.