கணவருக்கு லிப்கிஸ் கொடுத்து ஓணம் பண்டிகையை கொண்டாடிய அமலா பால்!!

433

அமலா பால்..

நடிகை அமலா பால், தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். சிந்து சமவெளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அமலா பால், இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் சில காரணத்தால் விவகாரத்தில் முடிந்தது. அதன் பின் அமலா பால் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 2 ஆம் திருமணம் செய்து குழந்தையை சமீபத்தில் பெற்ற அமலா பால், லெவல் கிராஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி ராயன் படம் வெளியான போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது Dvija என்ற படத்திலும் நடித்திருக்கிறார் நடிகை அமலா பால்.

இதற்கிடையில் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார். தற்போது நடிகை அமலா பால் குழந்தை, கணவர் மற்றும் குடும்பத்துடன் ஓணம் கொண்டாடி இருக்கிறார்.கணவருடன் ரொமான்ஸ் செய்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.