“நான் இன்னும் ராமராஜனை காதலிக்கிறேன்” – நடிகை நளினி பளீச் !

443

நடிகை நளினி..

தமிழ் சினிமாவில் ரஜினி கமலை ஓரங்கட்டும் அளவுக்கு கொடிகட்டி பரந்த ராமராஜனின் முன்னாள் மனைவிதான் நடிகை நளினி.

இவர் கதாநாயகி, வில்லி, குணச்சித்திர வேடம் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்தவர். இவர் சமீபத்தில் ஒரு பிரபல யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது ராமராஜனுடனான காதல் குறித்து பேசிய அவர், ”நான் பிஸியாக நடிச்சிட்டு இருந்த நேரம், அப்போ என் கிட்ட சாப்பிட்டாச்சா என்று கேட்க கூட யாரும் இல்ல.

எதோ ஒரு படப்பிடிப்பின் போது உதவி இயக்குநராக இருந்த ராமராஜன் என்னிடம் சாப்பிட்டாச்சா என்று கேட்டார். அதுவே அவரை பிடிப்பதற்கு அடிப்படையாக இருந்தது” என்றார்.

நடிகர் ராமராஜனுடனான பிரிவு குறித்து பேசிய அவர், ” நாங்க பிரிஞ்சது எங்க குழந்தைகளுக்கு நல்லது தானு தோணுச்சு. நான் இன்னும் அவரை காதலிக்கிறேன்” என்றார்.