OTT யில் வெளியாகும் இயக்குநர் கௌதம் மேனன்னின் மாஸ் படம்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

463

இயக்குநர் கௌதம் மேனன்…

தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை தனது சிறந்த இயக்கத்தின் மூலம் கொடுத்தவர் முன்னணி இயக்குநர் கௌதம் மேனன்.

ஆம் மின்னலே எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் காக்க காக்க படத்தின் மூலம் சிறந்த இயக்குனர் என்று முத்திரை பதித்தவர் கௌதம்.

ஆனால் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, நடுநிசி நாய்கள், என்னை அறிந்தால் போன்ற பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனர் ஆனார்.

மேலும் இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்ட ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதும் ஓடவில்லை.

இந்நிலையில் தற்போது சில வருடங்களாக இவர் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் படம் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம். இப்படம் ஏதோ சில காரணங்களால் இதுவரை திரைக்கு வர முடியாமல் ரிலீஸில் பின்தங்கி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை OTT தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் கூடிய விரைவில் இதனை குறித்து படக்குழு அறிவிப்பு வெளிவர வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.