லாஸ்லியா…
தமிழ் சினிமா பலருக்கும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லாஸ்லியா.
இவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படம் கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லாஸ்லியா அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் அழுத்தமாக கால் பதிக்கவுள்ளார்.
இவர் அடுத்து ஒரு கிரைம் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளாராம், இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜா என்பவர் இயக்கவுள்ளாராம்.
இந்த படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக ஒரு அறிமுக இயக்குனர் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் லாஸ்லியா கண்டிப்பாக தமிழ் சினிமாவில் அழுத்தமான இடத்தை பிடிப்பார் என எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றனர்.