சித்ராவுக்கு ஏற்பட்ட சோகம்…
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் நடிகை சித்ரா. சீரியலில் இருவருக்கும் கதிருக்கு வரும் காட்சிகள் எல்லாம் மக்களிடம் பிரபலம்.
சில சின்ன சின்ன காதல் பாடல்கள் இவர்களின் காட்சிகளை வைத்து வரும் வீடியோக்களை நாம் பார்த்திருப்போம். அண்மையில் சித்ராவுக்கு சொந்த தொழில் செய்யும் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில், நீங்கள் ஸ்டார் ஜோடி நிகழ்ச்சியில் வருவீர்கள் என்று எதிர்ப்பார்த்தேன், ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளார்.
அதற்கு சித்ரா, அதில் கலந்துகொள்வதாக தான் இருந்தேன். ஆனால் இடையில் தொலைக்காட்சியில் இருந்து போன் வந்தது.
அவர்கள் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கு பெறுவது சரியாக படவில்லை. விரைவில் உங்களுக்கான ஒரு நல்ல தளம் கிடைக்கும். உங்களை நினைத்து பாவமாக இருக்கிறது என்று சொன்னார்கள்.
இதை கேட்டதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, இருந்தாலும் பரவாயில்லை என்று விட்டுவிட்டேன் என்று பதிவு செய்துள்ளார்.