வெளியே சொல்லாமல் 5 வருடத்திற்கு முன்பே திருமணம் முடிந்தது ஏன்? காரணத்தை கூறிய நடிகை!!

237

சரண்யா துராடி..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் நடிகையாக மாறியவர் நடிகை சரண்யா துராடி. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகையாக பிரபலமானவராக இருக்கும் சரண்யா துராடிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே அவரது காதலுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஆனால், அதனை அவர் வெளியே சொல்லவில்லை.

இவருக்கு திருமணம் விஷயம் சமீபத்தில் தான் அனைவருக்கும் தெரியவந்தது. இந்த நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் ‘5 வருடத்திற்கு முன் திருமணமான நிலையில் ஏன் அதனை வெளியே சொல்லவில்லை’ என கேள்வி கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த நடிகை சரண்யா “ன்னுடைய பர்சனல் வாழ்க்கை பர்சனலாக இருக்கட்டும் என்று நினைத்து தான் இதுவரை திருமணம் ஆன விஷயத்தை வெளியே சொல்லவில்லை” என கூறியுள்ளார்.