இந்திரஜா…
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் சென்ற வருடம் திரைக்கு வந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம் தான் பிகில்.
கால்பந்து போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் ரு.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் இப்படத்தில் பெண் கால்பந்து வீராங்கனைகளாக பிரபல நடிகைகள் இந்துஜா, வர்ஷா, அமிர்தா, ரெப மோனிகா ஜான், இந்திராஜா என பலரும் நடித்திருந்தனர்.
இதில் இப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் தான் காமெடி நடிகர் ரோபா ஷங்கரின் மகள் இந்திரஜா.
பிகில் படத்தில் பாண்டியமா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குண்டம்மா என்று விஜய் அழைததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் இந்திரஜா.
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் இவரது சிறு வயது புகைப்படங்கள் வெளிவந்த மிகவும் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..