பிகில் படத்தின் Original VFX காட்சிகள் வெளிவந்தது.. வீடியோவுடன் இதோ..!

1011

பிகில் படத்தின் Original VFX காட்சிகள்…

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாம் முறையாக நடித்து சென்ற ஆண்டு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வந்த படம் பிகில்.

தீபாவளிக்கு திரைக்கு வந்த இப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரு. 300 கோடி வரை வசூல் செய்து விஜயின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

மேலும் இப்படத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்ட ஒன்று VFX காட்சிகள் தான். ஆம் பிகில் படத்தை பெரிதும் தாங்கி நின்ற ஓர் விஷயம் VFX.

இப்படத்திற்காக VFX காட்சிகளில் பாலிவுட் ஹீரோவான அஜய் தேவ்கன் தலைமையில் உள்ள NY VFXWAALA எனும் நிறுவனம் தான் வேலை செய்துள்ளது.

இந்நிலையில் படம் வெளிவந்து பல மாதங்கள் ஆகிய நிலையில் தற்போது பிகில் படத்தின் முழு Original VFX காட்சிகளின் வீடியோவை NY VFXWAALA நிறுவனம் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.