பிக்பாஸ் வாய்ப்பை வேண்டாம் என்று கூறிய பிரபல இளம் நடிகர்- அதற்கு காரணம் இதுதான்…!

417

பிக்பாஸ்…

பாலிவுட்டில் 14வது பிக்பாஸ் சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அதில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

தென்னிந்திய மொழிகளிலும் விரைவில் 4வது சீசன் தொடங்கவுள்ளது, தமிழ், தெலுங்கு என அதன் அறிவிப்பும் வெளியாகிக் கொண்டு வருகின்றன.

இந்த பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் அதை நிராகரித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஜெயின் இமாம்.

பிக்பாஸ் 14வது சீசனிற்காக அந்நிகழ்ச்சி குழுவினர் இவரை அணுகியுள்ளனர். பிக்பாஸில் கலந்துகொள்ள இது சரியான நேரம் இல்லை, பெரிய வாய்ப்பை நோக்கி கவனம் செலுத்தியுள்ளேன்.

TRPக்காக தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்க நான் விரும்பவில்லை என கூறியுள்ளார்.