வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்யும் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் வீடியோ!!

246

ரம்யா பாண்டியன்…

நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடி போட்டோஷூட் மூலமாக ஒரே நாளில் பெரிய அளவில் வைரல் ஆனவர். அதை தொடர்ந்து, பல கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதனை அவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானார்.

அதற்கு முன்பு படங்களில் அவர் நடித்து இருந்தாலும் இவரின் கிளாமர் போட்டோஷூட் தான் அவரை பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது.

அதனால் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் ரம்யா. ஆனால், அதன் மூலம் பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்த்த ரம்யாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பட வாய்ப்புகள் கிடைக்காததால் வேறுவழியின்றி தற்போது, திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக தயாராகி விட்டார்.

இவர் யோகா பயிற்சியாளராக இருக்கும் லோவல் தவான் என்பவரை காதலித்து வந்துள்ளார். அவருடன் வரும் நவம்பர் மாதம் 8- ம் தேதி ரிஷிகேஷில் கங்கை நதி ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளதாகவும், நவம்பர் 15 – ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

தற்போது தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்த ப்ரீ வெட்டிங் வீடியோவில் பிரமோவை வெளியிட்டுள்ளார். வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்ததை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.