நோயல் சீன்…
தெலுங்கு சினிமாவில் நடிகர், ராப் பாடகர், தொகுப்பாளர் என பன்முக திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர் நோயல் சீன்.
இவருக்கும் எஸ்தர் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கிறிஸ்துவ முறையில் நடந்த இவர்களது திருமண புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
அதற்கு முன்பே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இப்போது திடீரென ஒரு அதிர்ச்சி தகவலை நடிகர் வெளியிட்டுள்ளார்.
அதாவது அவரும், அவரது மனைவியும் விவாகரத்து பெற்றுள்ளனராம்.
ஏற்கெனவே இந்த முடிவு எடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்களாம்.
நீதிமன்ற அனுமதி வந்ததும் இந்த தகவலை தான் வெளியிடுவதாக நடிகர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.