சில்க்கி ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!!

512

கீர்த்தி பாண்டியன்…

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் ஒருவர் கீர்த்தி பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் மகளான இவர் பல படங்களில் நடித்து வருகிறார். 90 களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் கூடவும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் உள்ளார்.

இடையில் தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவரின் மகள்தான் கீர்த்தி பாண்டியன். மேடை நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது அவர் பகிரும் கிளாமர் போட்டோக்கள்தான். அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தனர்.

அந்த படம் வெற்றி பெறாததால் அடுத்து கீர்த்தி பாண்டியனுக்கு பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. வரிசையாக புகைப்படங்களை பகிரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இவரின் பெரியப்பா மகளான ரம்யா பாண்டியனும் இதுபோல புகைப்படங்களின் வாயிலாகவே ரசிகர்களைக் கவர்ந்தார்.  ஆனால் அவரை எல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு இருக்கிறது கீர்த்தி பாண்டியனின் புகைப்படங்கள். இந்நிலையில் அக்காவின் க வர்ச்ச்சி போட்டோஷூட்டுக்கு போட்டியாக கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.