உணர்ச்சி வசத்துடன் பதிவிட்ட நடிகர் நகுலின் மனைவி…
அனைவரையும் ஆட்டம் போட வைத்த நாக்கு மூக்கா பாடல் என்றதும் உடனே நம் நினைவிற்கு வருபவர் நடிகர் நகுல் தான். காதலில் விழுந்தேன், மாசிலாமணி, மெல்லினம், பிரம்மா என படங்களில் நடித்து வந்தார்.
தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக தொடர்ந்து பங்கேற்று வருகிறார். 2016 ல் ஸ்ருதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தன் பிறந்த நாளன்று தன் மனைவி கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். நகுல் ஸ்ருதி தம்பதிக்கு அண்மையில் குழந்தை பிறந்தது.
பிரசவம் இப்படி தான் நடக்க வேண்டும் என பதிவிட்டிருந்த ஸ்ருதியை சிலர் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் அவர் தற்போது அப்படியான பிரசவ முறை தான் நல்ல படியாக குழந்தை பெறவைத்தது என உருக்கத்துடன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.