அட்லீ – ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட், லீக்கானது படத்தின் சீக்ரெட்..!

327

அட்லீ – ஷாருக்கான் படத்தின் புதிய அப்டேட்…

ராஜா ராணி படத்தின் மூலம் இளம் இயக்குநராக அறிமுகமாகி, அதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து தெறி, மெர்சல் என ஆகிய மாஸ் ஹிட் படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குனர் அட்லீ.

இதனை தொடர்ந்து மூன்றாம் முறையாக பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் சென்ற ஆண்டு இவரின் இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ. 300 கோடி வசூல் செய்தது.

மேலும் இப்படங்களை தொடர்ந்து அட்லீ பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாக இருக்கும் ஷாருக்கானை வைத்து படம் பண்ண போவதாக தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் தான் இப்படத்தின் கதையை முழுமையாக ஷாருக்கானிடம் அட்லீ கூறியுள்ளார் என இணையத்தில் தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் சில சீக்ரெட் விஷயங்கள் தற்போது கசிந்துள்ளது. ஆம் அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கான் ஒரு அண்டர் கவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்தின் பாதியில் இருந்து துவங்கும் என சில தகவல்கள் தற்போது தெரிவிக்கின்றனர்.