“துருவ நட்சத்திரம் படம்னு ஒன்னு இருக்குறதையே மறந்துட்டீங்க போலயே” கௌதம் மேனனின் அடுத்த படம் !

371

கௌதம் வாசுதேவ் மேனன்…………….

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.இவருடைய படத்தின் தலைப்புகள் செந்தமிழில் தான் இருக்கும்.

இவருக்கு தமிழில் மீது இருக்கும் பற்றை காட்டுகின்றது. தமிழ் ரசிகர்களுக்கு பல அழகான படங்களை கொடுத்தவர். இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவருடைய சமீப கால படங்கள் AYM, ENPT மேலும் பல படங்கள் அடிக்கடி சிக்கலை சந்தித்தன. மூன்று ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வாய்ஸ் ஓவர் வைத்தே ரிலீஸ் செய்துவிட்டார், படம் படுதோல்வி. தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ தீயாய் பரவி வரும் நிலையில், எ எல் விஜய், வெங்கட்பிரபு நலன் குமாரசாமி

போன்ற ட்ரெண்டிங் இயக்குனர்களுடன் சேர்ந்து குட்டி ஸ்டோரி என்னும் ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார் கௌதம் மேனன். தற்போது அந்த படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

காதலை மையம் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் Promo வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த கவுதம் மேனனின் ரசிகர்கள்,”துருவ நட்சத்திரம் படம்னு ஒன்னு இருக்குறதையே மறந்துட்டீங்க போலயே” என்று உச் கொட்டி வருகிறார்கள்.