குட்டி ஸ்டோரி எங்க வரைக்கும் ஒர்க்கவுட் ஆகிருக்கு பாத்தீங்களா! ஒன்று சேரும் முக்கிய பிரபலங்கள்..!

435

ஒன்று சேரும் முக்கிய பிரபலங்கள்…

குட்டி ஸ்டோரி என்ற சொன்னவுடனே அனைவருக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய பாடல் தான் நினைவிற்கு வரும். அப்படியாக அவர் மேலும் ஒரு மேஜிக்கை ரசிகர்கள், ரசிகைகள் மனதில் செய்துவிட்டார்.

அப்பாடலின் பெயரிலேயே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அழகாக காதலை வெளிப்படுத்தும் 4 கதைகள் கொண்ட ஆந்தாலஜி படமாக உருவாக்கவுள்ளாராம்.

ஒவ்வொரு கதையும் அரைமணி நேர அளவில் மொத்தம் 2 மணி நேர கால அளவாக கௌதம் மேன், வெங்கட் பிரபு, விஜய், நலன் குமாரசாமி என நான்கு இயக்குனர்கள் இணைகிறார்கள்.

இதுகுறித்த புரமோ வெளியாகியுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.