Vj அர்ச்சனா….
இன்று பயங்கர பிஸியாக இருக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் காமெடி டைம் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் Vj-வாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார்.
அதை தொடர்ந்து அதே சேனலில் இளமை புதுமை, செலிபிரிட்டி கிச்சன், போன்ற நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கினார். இவருடைய கலகலப்பான பேச்சினால் இவருக்கு அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் ஏராளம். அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கூட தொகுப்பாளராக பணியாற்றினார்.
இவருக்கு திருமணமாகி சாரா என்கிற ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ச ரி க ம பா என்ற நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்குகிறார்.
தொகுப்பாளினி அர்ச்சனாவும் மற்றும் அவருடைய மகள் சாராவும் சேர்ந்து ஜீ தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை இருவரும் தொகுத்து வழங்கினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவருமே சேர்ந்து ஒரு விளம்பரத்திலும் கூட நடித்துள்ளார்கள்.
இந்தநிலையில் ஓணம் பண்டிகை அன்று தனது மகளுக்கு ஓணம் புடவையை கட்டி சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் உங்கள் மகளை குழந்தையாக பாருங்கள். வயசுக்கு கூட வராத தனது மகளை கட்டாயப்படுத்துவது நல்லாவா இருக்கு ? என்று ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.
View this post on Instagram