பிக்பாஸ் சேரன் உண்மையில் யார் தெரியுமா : பல விசயங்களை சொன்ன பிரபல நடிகை!!

1030

பிக்பாஸ் சேரன்

தற்போது முக்கிய டிவி சானலில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருப்பவர் இயக்குனர் சேரன். அவர் மீது மீரா மிதுன் சில தவறாக புகார் கூறியது பலருக்கும் முகம் சுளிப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் சேரன் பற்றி நடிகை சங்கவி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். சேரனை எனக்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் நாட்டாமை படத்தில் உதவியாளராக பணியாற்றிய போதிலிருந்தே தெரியும். அவர் நல்ல மனிதர், நண்பர், அற்புதமான இயக்குனர்.

என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். இன்னும் என் மனதில் இருக்கிறார். அவருக்கும் அவரின் குடும்பத்திற்கும் என் வாழ்த்துக்கள். பிக்பாஸ் அவர் வெற்றி பெற்றால் எனக்கு மகிழ்ச்சியே.

சேரன் அடிக்கடி கோப்படும் கேரக்டர் அல்ல. உதவி இயக்குனர்கள் மற்றவர்கள் என எல்லோரிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவருவார் என சங்கவி கூறியுள்ளார்.