கியாரா அத்வானி..
கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் கியாரா அத்வானி. அந்த படத்தில் கணவரால் உடலுறவில் திருப்தி அடையாத பெண்ணாக அவர் நடித்திருந்தார். அந்த படத்தின் இறுதிக்காட்சியில் யாருமே நடிக்க துணியாத காட்சிகளில அவர் நடித்திருந்தார். ஆனால் பின்னர் அந்த காட்சிகளில் நடித்ததற்காக வருத்தப்படுவதாகக் கூறியிருந்தார்.
இதனால் அவருக்கு இந்த வேடம் இளைஞர்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அந்த வேடத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களோடு இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார்.
அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த கியாரா அத்வானி, பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் அமைந்தன. அதையடுத்து சக பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின.
பாலிவுட் தாண்டி தற்போது தென்னிந்திய மொழிகளிலும் அவர் நடிக்க தொடங்கியுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் கதாநாயகியாகி தமிழ் சினிமாவுக்கும் வர உள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகின்றன.
அந்த வகையில் இப்போது சிவப்பு நிறத்தில் சிக்கனமான ஆடையணிந்து இளமை ததும்ப அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் இளசுகளை சுண்டி இழுத்துள்ளன.