திஷா பதானி..
கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் தோனியின் முன்னாள் காதலியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை திஷா பதானி.
அதை தொடர்ந்து, ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்தில் நடித்து சர்வதேச நடிகையாகவும் மாறினார். இந்திய நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு இன்ஸ்டாகிராமில் 61.5 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளார்.
தமிழில், இவர் சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். ஆனால் இவரின் நடிப்பு அதிக ட்ரோல்களை சந்தித்தது.
தற்போது, திஷா பதானி மினுமினுக்கும் உடையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.