சல்மான் கானுடன் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!!

1127

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். தெறி படத்தின் ரீமேக்கான பாலிவுட்டில் பேபி ஜான் படம் ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தின் கீர்த்தி சுரேஷ் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் நடந்து முடிந்த கையோடு பிரமோஷனுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த வாரம், சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.

அங்கு சல்மான் கானுடன் பேபி ஜான் படத்தின் பாடலுக்கு தாலியுடன் ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.