போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல நடிகை கைது : விரைவில் சிக்கும் பிரபலங்கள்..!

426

போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல நடிகை கைது..

போதைப் பொருள் பதுக்கல் விவகாரத்தில் தொடர்புடைய பிரபல கன்னட நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்டு வந்த போதைப் பொருள் புழக்கம், சினிமா திரையுலகத்திலும் அதிகரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் இந்தி திரைப்படத் துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் முகங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ள அவரது காதலியும், சக நடிகையுமாக ரியா சக்ரவர்த்தியின் தொடர்பில் இருந்தவர்களுக்கு போதைப் பொருள் பதுக்கல் வழக்கில் தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்த சம்பவம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், போதைப் பொருள் பதுக்கல் விவகாரத்தில் தொடர்புடைய பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ள ராகினி திவேதியை தொடர்ந்து, போதைப் பொருள் பதுக்கல் மற்றும் கடத்தல் வழக்கில் மேலும் சில பிரபலங்கள் சிக்குவார்கள் என தெரிகிறது.