இடையழகை காட்டி செம போஸ் கொடுத்த ஹன்சிகா!!

320

ஹன்சிகா..

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

 ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.