திருமணத்தை விட அதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம்.. வெளிப்படையாக பேசிய ஸ்ருதிஹாசன்!!

1258

ஸ்ருதிஹாசன்..

ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. அதோடு பாலிவுட்டிலும் ஸ்ருதி ஒரு சில படங்களில் தலையை காட்டி வருகின்றார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் திருமணம் குறித்து மிக வெளிப்படையாக பேசியுள்ளார், அது பலருக்கு அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. அதில்,

திருமணம் என்பதில் எனக்கு பெரியளவில் உடன்பாடில்லை, ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். ஆனால், அதற்காக நான் திருமணம் செய்யமாட்டேனா என்றால் அதற்கு என்னிடம் பதில் இல்லை,

ஏனெனில் வாழ்க்கை என்பதே கணிக்க முடியாதது தானே. என் வாழ்க்கையில் திருமணம் செய்துக்கொள்ளும் அளவிற்கு ஸ்பெஷலாக இன்னும் நான் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.