விஷாலின் திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லட்சுமி மேனன்..!

461

விஷாலின் திருமணம் குறித்து பேசிய லட்சுமி மேனன்…

சினிமாவில் பிரபலங்கள் சிலர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அப்படி கிசுகிசுக்கப்பட்ட ஜோடி என்றால் விஷால்-லட்சுமி மேனன்.

இருவரும் நடித்த படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்கள் சூப்பர் ஜோடி என கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். அவர்களும் படங்களில் நெருக்கமாக நடிப்பது என இருக்க அதிகம் செய்திகள் வந்தன.

கடந்த வருடம் விஷாலுக்கு, திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகள் அனிஷாவுடன், விஷாலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

அதன்பிறகு அவர்களது திருமணம் நடக்கும் என்று பார்த்தால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

இந்த நிலையில் நடிகை லட்சுமி மேனனிடம் விஷால் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், எப்போதாவது விஷாலிடம் மெசேஜில் பேசுவேன், வேறு யாருடனும் பேச மாட்டேன்.

விஷால் கல்யாணத்திற்கு கூப்பிட்டால் போவேன், அப்போது சூழல் எப்படி இருக்கிறது என்பதை முதலில் பார்ப்பேன் என கூறியுள்ளார்.