நடிகை தமன்னா..
கடந்த 2006ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா.
வில்லியாக அறிமுகமானவர் அடுத்தடுத்து வியாபாரி, கல்லூரி படங்களில் நாயகியாக நடிக்க தொடங்க முன்னணி நடிகர்களுடன் இணைந்து படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சிறுத்தை, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் அதிக படங்கள் நடித்துள்ளார். வெப் சீரியஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது. அதாவது அவர் விமான நிலையத்தில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் தான் அது.