ஸ்ரேயா..
தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன.
எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும்
நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் . அதே போல வடிவேலுவோடு அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவரின் மார்க்கெட்டை காலி பண்ணியது என சொல்லப்பட்டது.