கீர்த்தி ஷெட்டி..
நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
கீர்த்தி தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.
இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிய வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார். அதையடுத்து தமிழில் இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக்ம் குவித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.