தளபதி விஜய்க்காக காத்திருக்கிறேன்! வெறித்தனமா இருக்குமாமே! உற்சாகத்துடன் பதிவிட்ட பிரபலம்!!

467

தளபதி விஜய்க்காக காத்திருக்கிறேன்…

நடிகர் விஜய் எவ்வளவு சோதனைகளையும், அவமானங்களையும் கடந்து தற்போது உச்சத்தில் இருப்பதை அனைவரும் அறிவார்கள். அவரின் பொறுமையும், அமைதியும், அன்பும், மரியாதையும் நல்ல பண்பாளராக அவரை மாற்றியுள்ளது.

அவரின் படங்கள் அரசியல் வட்டத்தில் சலசலப்பையும் ஏற்படுத்த தவறுவதில்லை. நல்ல வசூல் சாதனையும் பெறுகின்றன. அதே வேளையில் அவரை ரசிகர்கள் தொடர்ந்து அரசியலுக்கு அழைத்த வண்ணம் இருக்கின்றார்கள்.

ரசிகர்கள் மன்றம், மக்கள் இயக்கம் மூலம் சேவை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விஜய் 2026 ல் அரசியலுக்கு வருவார் என்ற கூற்றும் உலாவுகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் அவ்வப்போது போஸ்டர் அடித்து ஊருக்குள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு. அப்படியாக நடிகராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆர் போன்ற தோற்றத்தில் விஜய்க்கு போஸ்டர் அடித்து ஓட்ட தற்போது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபக்கம் இருக்க விஜய்யின் அடுத்த படம் இயக்குனர் வெற்றிமாறனுடன் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கலக்கப்போவது யாரு புகழ் தீனா தளபதி விஜய்க்காக காத்திருக்கிறேன்! வெற்றிமாறன், விஜய் கூட்டணி வெறித்தனமா இருக்குமாமே என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.