நடிகை ஹன்சிகா மீது அண்ணி கொடுத்த புகார்.. நடந்தது என்ன?

2489

ஹன்சிகா மோத்வானி..

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கி பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் சில வருடங்களுக்கு முன் சோஹெல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், குடும்ப வன்முறை புகாரில் நடிகை ஹன்சிகா மீது வழக்குப் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி என்பவரை 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சில காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியே வாழ்ந்து வருகின்றனர். தற்போது, நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கன் நான்சி குடும்ப வன்முறை புகார் கொடுத்துள்ளார்.

அதில், “ஹன்சிகா மோத்வானியும், அவரது தாயார் மோனோ மோத்வானியும், என்னுடைய திருமண வாழ்க்கையில் தலையிட்டு, எனக்கும், எனது கணவருக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தினர். எனது கணவர், அவரது தாயார் மற்றும் சகோதரி ஹன்சிகா மூவரும் என்னை டார்ச்சர் செய்தனர்” என கூறி புகார் கொடுத்துள்ளார்.