ஐஸ்வர்யா மேனன்..
தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில படங்களில் தலைகாட்டியவர் ஐஸ்வர்யா மேனன். அதில் தமிழ் படம் 2 ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும் தலைவி ரசிகர்கள் புடைசூழ லைம்லைட்டில் இருக்கக் காரணமே அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்தான்.
தனது உடலுக்கு ஏற்ற கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வரிசையாக அவர் இறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் அவர் போட்டோ எப்போது வரும் என ஆயிரக் கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.
இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். வாய்ப்பில்லாத காரணத்தால் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைக் கவர நினைக்கும் இவர் இப்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய பர்ஸனல் விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவரிடம் “கடைசியாக நீங்கள் எப்போது அழுதீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “நான் நான்கு மாதங்களுக்கு முன்னால் அழுதேன். நான் எல்லோர் முன்னாலும் அழமாட்டேன். தனியாக ரூமுக்கு சென்று அழுதுவிடுவேன். என் அம்மா முன்னால் அழுதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் நான் எப்போதுமே தனிமையில் இருக்கும்போதுதான் அழுவேன்” எனக் கூறியுள்ளார்.