என்னா இப்டி மாறீட்டீங்க.. தொகுப்பாளினி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

994

தொகுப்பாளினி டிடி..

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி,

தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அவ்வளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை. இவரது நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள் என்று கூறலாம், மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை கொண்டு செல்வார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் டிடி தற்போது பழைய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் இதற்கு முன்பு பிரபலமான பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு அப்படியே தனது லுக்கை மாற்றி பக்தி மயமாக காணப்படுகிறார், அவர் அந்த புகைப்படங்களை வெளியிட அந்த பதிவிற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.