ப்பா செம.. சிக்கென போஸ் கொடுத்த அதுல்யா ரவி!!

442

அதுல்யா ரவி..

நடிகை அதுல்யா ரவி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் காதலை மையமாக வைத்துஎடுக்கப்பட்டது.

இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதுல்யா.இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக வெளியாகி பின்னர்முழு நீள படமாக எடுக்கப்பட்டது. இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார். பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் கதாநாயகன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம், ஏமாலி, போன்ற படங்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து கேப்மாரி என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக விமர்சனங்களை பெற்றார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.பின்னர் சாந்தனுவுடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்தார். பின்னர் கடந்தாண்டு வட்டம் , எண்ணி துணிக, கேடவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் அதுல்யா நடிப்பில் மீட்டர் என்ற தெலுங்கு படம் வெளியானது. இது இவரது முதல் தெலுங்கு படமாகும். இப்போது டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார் அதுல்யா. அதுல்யா ரவியின் இதுவரை பார்த்திராத பல புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.