சஞ்சனா நடராஜன்..
தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன். இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருந்தார். மேலும் டாங்கே என்ற படத்திலும் நடித்துள்ள சஞ்சனா,
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் டிரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.