ஆரவ் திருமணத்திற்கு ஓவியா எங்கே என்று கேட்ட ரசிகர்?- சுஜா வருணி கலக்கல் பதில்..!

394

ஆரவ் திருமணத்திற்கு ஓவியா எங்கே?

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனை யாராலும் மறக்க முடியாது. ஆரம்பம் கொஞ்சம் சர்ச்சையாக இருந்தாலும் மக்களிடம் பின் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

இந்நிகழ்ச்சியின் மூலம் காதல் ஜோடிகளாக பேசப்பட்டவர்கள் ஆரவ்-ஓவியா. தீவிர இவர்களது காதல் பேசப்பட்டது, ஆனால் ஆரவ் முதலில் இருந்தே இதில் ஈடுபாடு காட்டவில்லை.

நிகழ்ச்சி முடிந்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்ட சேர்வார்கள் என பல ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால் கடந்த செப்டம்பர் 6ம் தேதி ஆரவிற்கும்-ராஹே என்பவருக்கும் திருமணம் நடந்தது.

ஆரவ் திருமணத்தில் சுஜா வருணி கலந்துகொண்டு அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

ஒரு ரசிகர் ஓவியா எங்கே அக்கா என்று கேட்க சுஜா அவர் வீட்டில் இருப்பார் என அசால்ட்டாக பதில் கூறியுள்ளார்.