ஸ்ருதிஹாசன்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமா துறையில் அறிமுகம் ஆனவர்.
தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஸ்ருதி, ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக திருமண வயது வந்த நடிகைகளிடம் முதலில் கேட்கப்படும் கேள்வி திருமணம் எப்போது என்று தான்.
இந்நிலையில், திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” என் கல்யாணத்திற்கு கரண்ட் பில் கட்ட போறீங்களா, சாப்பாடு போட போறீங்களா,
இல்ல இன்விடேஷன் அடிக்க போறீங்களா, இது எதுவும் திருமணம் குறித்து கேள்வி கேட்பவர்கள் செய்ய போவது இல்லை. அதனால் விட்டுவிடுங்கள் இனி இது போன்று கேள்வி கேட்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.