பூஜா ஹெக்டே..
தமிழ் மற்றும் தெலுங்கில் எப்போதோ அறிமுகம் ஆகிவிட்டாலும், சரியான ஹிட்டுக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. பின்னர் மகரிஷி, அலா வைகுந்தபுரம்லூ என வரிசையாக ஹிட்களைக் கொடுத்த அவர் முன்னணி நடிகை ஆனார். பின்னர் அவருக்கு தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், அரபிக்குத்து பாடலின் டான்ஸில் ரசிகர்களைக் கவர்ந்தார்.
அதன் பின்னர் பிரபாஸ் உடன் அவர் நடித்த திரைப்படமான ராதே ஷ்யாம் பேன் இந்திய அளவில் ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது. இப்போது சல்மான் கானோடு கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தியா முழுவதும் அறியப்பட்ட தென்னிந்திய நடிகையாக இப்போது பூஜா ஹெக்டே உருவாகியுள்ளார்.
பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.
பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. நடிகர்கள் என்னதான் தொந்தியும் தொப்பையுமாக இருந்தாலும், ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் நடிகைகளை பொறுத்த வரை உடலழகை மெய்ண்டெய்ன் செய்வதில் அதிக கவனம் செலுத்துவர். மேக்கப் இல்லாமல் எந்த புகைப்படத்தையும் வெளியிடுவதில்லை. அப்படி ஒரு நடிகைதான் பூஜா ஹெக்டே.