மீண்டும் திருமண கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்!!

33

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனி உடன் கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்

மேலும் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகி இருந்த முதல் படமான பேபி ஜான் வெளியாகி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த படத்தை தயாரித்த அட்லீக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கு கீர்த்தி சுரேஷ் தனது திருமண கொண்டாட்டங்களில் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் கேரள பெண் போல உடை அணிந்து திருமணத்தை உறவினர்களுடன் கொண்டாடி இருந்தார். அதன் புகைப்படங்களும் வைரலாகி இருந்தன.

தற்போது அவர் தமிழ் பெண் போல புது லுக்கிற்கு மாறி மீண்டும் திருமணத்தை கொண்டாட ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாக வைரலாகி இருக்கிறது. இதோ.