தளபதி கையில் இருப்பது இந்த சீரியல் நடிகையா? வைரலாகும் புகைப்படம்..!

492

தளபதி கையில் இருப்பது இந்த சீரியல் நடிகையா?

தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக போகும் படம் மாஸ்டர். படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இதற்கு நடுவில் விஜய் ஒரு குழந்தையை கையில் வைத்தபடி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று தகவல் இப்போது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இந்த புகைப்படத்தில் இருப்பது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகியாம்.

அத்தொடரில் புதுமுக நடிகையாக சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹிமா பிந்து.

இவரை தான் சிறு வயதில் இளைய தளபதி கையில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளாராம்.

அந்த புகைப்படத்தை கூட பிந்துவே தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.