குத்து பாடல் நடன நடிகைக்கு நேர்ந்த கொடுமை : வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம்!!

1089

நோரா பதேகி

பாகுபலி படத்தில் நடித்தவர் இளம் நடிகை நோரா பதேகி. கார்த்தி நடித்த தோழா படத்திலும் குத்துபாடல்களுக்கு நடமாடியுள்ளார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கவுரவ வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ஹிந்தி பிக்பாஸ் சீசன் 9 ல் கலந்துகொண்டார். கனடாவில் இருந்து சினிமாவில் நடிக்க இந்தியா வந்தவர் மிக மோசமான அனுபவங்களை பெற்றிருக்கிறார்.

அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் வாழ்வது எளிது கிடையாது. கஷ்டங்களை நிறைய அனுபவத்திருக்கிறோம். எங்களிடமிருந்து நிறைய பணம் பறிக்கிறார்கள்.

நானும் அதை இழந்திருக்கிறேன். என்னை இங்கு அழைத்து வந்த ஏஜென்சி மிக மோசமாக என்னிடம் நடந்துகொண்டது. இதனால் இதிலிருந்து வெளியேற நினைத்தேன். ஆனால் ஏஜென்சி என்னை என்னுடைய பணம் ரூ 20 லட்சத்தை திருப்பிதர மாட்டேன் என மிரட்டியது.

இதனால் விளம்பரத்தில் நடித்த பணம் ரூ 20 லட்சத்தை இழந்தேன். 8 பெண்களுடன் ஒரு அபார்ட்மெண்டில் இருந்தேன். அங்கு இருந்தவர்கள் என் பாஸ்போர்ட்டை திருடிக்கொண்டார்கள். அதனால் கனடாவுக்கு செல்ல முடியாமல் போனது. பின் ஹிந்தி கற்றேன். ஆடிசன் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கோமாளி போல என்னை கேலி செய்தார்கள்.

சீண்டினார்கள். வீட்டிற்கு அழுதுகொண்டே வந்தேன் நீ வேண்டாம் திரும்பி போய்விடு என காஸ்டிங் ஏஜென்ட் கூறினார்கள். நான் இந்த சம்பவத்தை வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என நோரா கூறியுள்ளார்.