சரோஜாதேவி….
அஜித் போல் இன்னொரு நடிகன் தனித்து வந்த ஒரு நட்சத்திர நடிகன் ஆவதற்கு சினிமாவில் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் தேவைப்படும். ஹீரோவாக வெற்றிகரமான நடிகராக வலம் வருவது என்பது தமிழ் சினிமா துறை காணாத ஒன்று. தமிழ் சினிமாவில் இவரின் ஆதிக்கம் அதிகமாவே இருக்கிறது.
அஜித்துடன் பணியாற்றிய எல்லா நடிகர்களும் என்ன சொல்வார்கள் என்றால் அவர் ஒரு ஜென்டில்மேன் என்று தவறாம சொல்லுவார்கள்.
இந்த காலத்தில் ஹீரோயின்கள் அவரை ரசிக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம். ஆனால் எம்ஜிஆர் காலத்து ஹீரோயின் கூட அவரை ரசிப்பது ஆச்சரியப்படக்கூடிய விஷயமே.
அப்படித்தான் நடிகை சரோஜாதேவி சமீபத்தில் அளித்த பேட்டியில், அஜித்தின் படங்களை விரும்பி பார்ப்பதாகவும் அவர் நடித்த படங்களில் என்னை அறிந்தால் படம் பிடித்த படம் என்று கூறியுள்ளார்.