நடிகை சுரேகா சிக்றி…
பிரபல ஹிந்தி சீரியல்களில் முக்கியமான ரோலில் நடித்து அசத்தியவர் நடிகை சுரேகா சிக்றி.
75 வயதான இவருக்கு நேற்று மூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளது, இதனால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நிலைமை கொஞ்சம் மோசமாக இருப்பதாக தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 முறை தேசிய விருது வாங்கியுள்ளார். கடந்த 2 வருடங்களில் இது இவருக்கு இரண்டாவதாக வரும் மூளை பக்கவாதம் என்கின்றனர்.
தமிழில் ஹிந்தி சீரியல்கள் அதிகம் டப் செய்யப்பட்டு வெளியானதால் தமிழ் சீரியல் ரசிகர்களுக்கும் இவர் பரீட்சயமானவர்.