சேரன் மீது சாண்டிக்கு ஏன் இவ்வளவு கோபம் தெரியுமா? பழைய அந்த பிரச்சனை தான் காரணம்!!

1261

சேரன் மீது சாண்டிக்கு ஏன் இவ்வளவு கோபம்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சாண்டி அங்கிருக்கும் அனைவரிடமும் சகஜமாக பழகி வருகிறார். ஆனால் சேரனிடம் மட்டும் அவர் சகஜமாக பழக முடியாமல், அவரைப் பற்றி பேசினாலே அந்த இடத்தில் இருந்து காணமல் போய்விடுகிறார்.

குறிப்பாக ஷாக்சி, லாஸியா பிரச்சனையின் போது கவீனிடம் சேரன் பேசினார். அப்போது அவர் போன பின்பு சாண்டி என்ன சாத்தான் வேதம் ஓதுச்சா என்று கேட்டார்.

இதை கமல் அப்படியே சேரனிடம் எபிசோடில் போட்டுக் கொடுத்தார், இப்போது வரையும் கூட சாண்டியால் அவரிடம் சகஜமாக பழக முடியவில்லை.

இதனால் இதற்கு என்ன காரணம் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சேரனின் இளைய மகளான தாமினி சந்துரூ என்பவரை காதலித்து வந்தார். இதனால் தாமினி அவருடன் செல்ல முடிவெடித்தார்.

ஆனால் இறுதியில் தாமினி மனம் மாறி சேரனுடனே சேர்ந்துவிட்டார். ஆனால் அந்த சந்துரு சூளமேட்டைச் சேர்ந்தவர், அவர் ஒரு நடன இயக்குனர், அதுமட்டுமின்றி சாண்டியின் நெருங்கிய நண்பர்.

தாமினி மற்றும் சந்துருவின் காதலுக்கு உதவியாகவும் இருந்துள்ளார். இது போன்ற சமயத்தில் சேரன் ஏதோ கூறிவிட்டு தாமினியை தன்னுடன் வைத்துக் கொண்டதால் அப்போதிருந்தே சேரனை சாண்டிக்கு பிடிக்காதாம், சும்மா தான் இருவரும் பேசிக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.