தற்கொலை செய்துகொண்ட இளம் சீரியல் நடிகை…
தெலுங்கு சினிமா சீரியல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் ஒரு செய்தி. மனசு மமதா, மௌன ராகம் போன்ற சீரியல்களில் முன்னணி ரோலில் நடித்து வந்தவர் கொண்டபள்ளி ஸ்ரவானி.
இவர் நேற்று தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
டிக்டாக் மூலம் அறிமுகமான ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் ஸ்ரவானி இப்படி ஒரு முடிவு எடுத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரவானிக்கு தேவராஜ் என்பவர் டிக்டாக் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.
பின் நாட்கள் செல்ல செல்ல நடிகைக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதை தாங்கிக் கொள்ள முடியாமல் நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.