“என்னை வெச்சு 15 மணி நேரம் எடுத்த என்னோட Glamour Videosலாம் கொடுங்க” கமல்ஹாசனை மிரட்டிய மீரா மிதுன் !

474

கமல்ஹாசனை மிரட்டிய மீரா மிதுன்…

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார்.

சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார். இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும், கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என சில வேலைகளை பார்த்து வருகிறார். அதில் முக்கியமான விஷயம் விஜய் சூர்யாவையும் அவர்களின் மனைவியும் திட்டி ரசிகர்களின் வெறுப்பை மேலும் சம்பாதித்தது. அது சற்று ஓயவே தற்போது வேறு ஒரு வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சர்ச்சைக்குள் இழுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

சென்னையில் இருக்கும் ஒரு ஏஜென்சி என்னை அணுகி ஒரு டான்ஸ் வீடியோ ஆல்பம் எடுத்தார்கள். அது மிகப்பெரிய ரீச் ஆனது. அவர்களுக்கு லைக்ஸ், வியூஸ் மற்றும் பணமும் வந்தது.

இதற்குப் பிறகு மற்ற பல நடிகர்களுடன் அந்த ஏஜென்சி பணியாற்ற துவங்கியது. அதற்கு பிறகு மீண்டும் என்னை ஒரு முறை அணுகினார்கள். ஒரு முழு நீல கிளாமர் டான்ஸ் வீடியோ ஆல்பம் பற்றி பேசினார்கள். இதற்காக ஷூட்டிங் கிட்டத்தட்ட 15 மணி நேரம் நடைபெற்றது. அந்த பாடல் அதன் பின் ரிலீஸ் ஆகவே இல்லை. ஏன் என்று கேட்டதற்கு தேவையில்லாமல் பல காரணம் சொன்னார்கள்.

என்னுடைய வீடியோ வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். Footage என்னிடம் கொடுங்கள் என கேட்டேன். கடந்த ஆறு மாதமாக கேட்டு வருகிறேன். இப்போது தான் அதன் பின்னணி என்ன என்பது தெரிய வந்திருக்கிறது.” அதே நிறுவனம் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் ஹீரோயினாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். நீங்கள் என்னுடைய வீடியோவை கொடுக்கவில்லை என்றால் நான் தடை வாங்கி விடுவேன்.

அது என்னிடம் கிடைக்கும் வரை உங்களால் எந்த ப்ராஜக்ட்டும் ஆரம்பிக்கவும், தொடரவும் முடியாது. சென்ற வருடம் நான் ஒப்பந்தமாகியிருந்த படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டு அக்ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்ய வைத்தார்கள். தற்போது மீண்டும் இதை செய்திருக்கிறார்கள்.”

என்னுடைய ஒரு வீடியோ கிடைக்காமல் செய்து விட்டால், என்னுடைய கரியரே அழிந்துவிடும் என்பது போல இதை செய்கிறார்கள். மிஸ்டர் கமல்ஹாசன் நீங்கள் இதே மாதிரி செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு எதிராகவும் நான் நடவடிக்கை எடுப்பேன்” என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை வேறு நினைவுபடுத்தி கமல் ஹாசனை கடுமையாக தாக்கி வீடியோவை வெளியிட்டுள்ளார்.