ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவா இது- ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிவிட்டாரே?

513

இந்திரஜா….

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ரசிகர்கள் மத்தியில் வசூல் சாதனை செய்து வெற்றியடைந்த படம் பிகில். இப்படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகி இருந்தது.

இப்படம் பெண்களின் கால்பந்து வீராங்கனைகள் மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பல பெண் நடிகைகள் மற்றும் உண்மையான கால்பந்து வீராங்கனைகள் நடித்திருந்தனர்.

அதில் நடிகை அமிர்தா, இந்துஜா, ரேபா மோனிகா ஜான், வர்ஷா, இந்திரஜா ரோபோ ஷங்கர், காயத்திரி உள்ளிட்ட நடிகைகள் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்தனர். இதில் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆம் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தை நம்மால் மறந்துவிட முடியாது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சியை கண்டிப்பாக நாம் மறக்க மாட்டோம். அந்த அளவிற்கு சிறந்த முறையில் நடித்திருப்பார் நடிகை இந்திரஜா.

இந்நிலையில் இவர் தற்போது தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் புதிதாக சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில் பிகில் படத்தில் நடித்திருந்த இந்திரஜா வா இது என்று கேட்கும் அளவிற்கு தோற்றமளிக்கிறார்.